வெள்ளி, நவம்பர் 18, 2011

பெண் சமுதாயம்



பெண்களுக்கு யார் எதிரி?
பெண்களே(தான்) பெண்களுக்கு எதிரியோ??
ஆண்களால் அடக்கிவைக்கப்பட்டது அகன்று
பெண்களாலேயே அழிக்கப்படுகிறார்கள் என்றென்னுகிறது!

கணவனை இழந்த பெண்ணை எந்த
கம்பனும் வசைபாடுவதில்லை - ஏன்
கண்ணகிகளே அவர்களைக் காயப்படுத்துகிறீர்?
கணவனைத் தாங்களும் இழக்கலாமென்பதை அறியாரீரோ??
பூவுக்கும் பொட்டுக்கும் தரும் மரியாதையை
அவைகட்கு அப்பெருமையை அளித்த
போற்றுதலுக்கு உரிய உங்கள்
பூவையர்க்கு அளிக்க தயங்குவதேன்??? 

மகளுக்கு மருமகனிடம் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை
மகன் மருமகளுக்கு அளிக்க மறுப்பதேனோ?
மருமகள் என்பவள் மகளின்
மறு அவதாரமென்பதை உணரீரோ??

மாமியாரை தன் தாயாய்
மனமொப்ப மறுத்தலே தவறாயின்
அப்பெரியவள் உன்னை மனந்தவனை
அடைகாத்தவள்  என்பதை மறத்தல் சரியா?

அண்ணனிடம் உரிமை கொள்ளும் தங்கைகளே!
அண்ணியவள் அண்ணனில் பாதியென்பதை எப்போதுணர்வீர்?
தம்பியவன் துணையவளின் தூணாயிருப்பதை விரும்பாத 
தமக்கைகளே தாங்களுமொரு தூண்எதிர்பார்ப்பதை மறுப்பீரோ??

பொன் நகைக்காய் உங்கள்
புன்னகையை இழப்பது இருக்கட்டும்!
உங்கள் இனங்களையும் இழப்பது
எங்ஙனம் விளங்காமல் போயிற்று?

ஆக்கல், அழித்தலுக்கு ஆதாரனமானவரே!
ஆண்களால் அம்மையைர்க்கு ஆபத்தில்லையெனவில்லை!! 
சந்தேகமான தந்தையாய்
சுமையான தமையனாய்
வம்பான தம்பியாய்
மமதையான காமுக மாமனாராய்
கொழுத்திவிட்ட கொழுந்தனாய்
கடடுக்கடங்கா கணவனாய்
ஆண்களாலும் துன்ப அம்புகள்
ஆங்காங்கே துளைத்தெடுப்பதை
இல்லை எனவேயில்லை!
இருந்துமவை குறைவே என்கிறேன்!!

அபூர்வ "குறிஞ்சி"பூ போல் 
அகிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அனைத்து பெண்களையும்
அரவணைத்து செல்லும் பெண்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
மறுக்க முடியாது
ஆனால் அவர்கள்
அரிதாகவே காண்கிறார்கள்

சமுதாயத்தில் பெண்களின் விடுதலைக்காய்
குமுறி போராடும் பெண் சங்கங்களே
பெண்களே பெண்களுக்கு முட்டுக்கட்டையாய்
பேரிடியாய் இறங்கி அடிமையாக்கும்
செயலை உணர்ந்து அந்நஞ்சு
செடியழிக்கும் தலையாய வேலையை
எங்கிருந்து, எப்போது எழுச்சியுடன்
பொங்கியெழுந்து துவக்கப் போகிறீர்?
உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கலாமே
தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களை
அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுதலே!
தடங்கள் பெயர்ந்து முடங்கியிருக்கும்
தங்கத் தாய்மார்களின் துயர் துடைக்குமே!!
எச்சங்கமும் வேண்டா வழி வகுக்குமே!!!


இப்பொன்னான முயற்ச்சியை நீங்கள்
இப்போது துவங்கினாலே போதும்!
உங்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து
அங்கத்தினரையும் முதலில் துளிர்க்க
வழி வகுத்து தாரீர்!!
வாழ்க்கைத் தானே செழிக்கும் - பிறகு
முப்பத்து மூன்று சதவிகிதத்தை
சொப்பனத்தில் மட்டுமல்லாது - அது
நனவாகினும் அதை அனுபவிக்க யாருமற்று
கனவாகவே வாழ்க்கை கடக்க கூடும்

அருள் கூர்ந்து உண்மைப்
பொருள் உணருங்கள் இல்லத்தரசிகளே
இங்கே உறைத்தவை யாவும்
உங்களின் மனம்
புண்படவல்ல, பண்படவே என்றும்
பண்பாட்டை அடைக் காப்பதும்
பூவையர்க்கு பிறவிப் பெருமையான
பத்துமாதக் கருச்சுமத்தல் போன்றதேயாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக